அந்தமான் கடல்பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற்று வரும் 25-ஆம் தேதி மேற்கு வங்கம் - வங்கதேச கடற்கரையை ஒட்டி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்த அவர், அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.