​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மூடப்பட்டுள்ள சாலைகள், மாற்றுப் பாதைகள் குறித்து அறிய ஏதுவாக Road Ease என்ற புதிய செயலி அறிமுகம்..!

Published : Oct 20, 2022 3:26 PM

சென்னையில் மூடப்பட்டுள்ள சாலைகள், மாற்றுப் பாதைகள் குறித்து அறிய ஏதுவாக Road Ease என்ற புதிய செயலி அறிமுகம்..!

Oct 20, 2022 3:26 PM

சென்னையில் திடீரென மூடப்படும் சாலைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறியும் வகையில் 'ரோட் ஈஸ்' என்ற செயலியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிமுகம் செய்துவைத்தார்.

மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் உள்ளிட்டவற்றால் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதை நிகழ்நேரத்தில் அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து பேசிய சங்கர் ஜிவால், கூகுள் மேப்பை விட விரைவாக இந்த செயலியில் போக்குவரத்து மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.