வங்கதேசத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிதக்கும் பண்ணைகளை அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
விளை நிலங்களில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கி இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள் மிதக்கும் படுக்கைகளில் நாற்றுகளை நட்டு தங்களது முன்னோர்களின் விவசாய நடைமுறையை மீண்டும் பின்பற்றி வருகின்றனர்.
200 ஆண்டுகள் பழமையான இந்த நடைமுறை ஆரம்பத்தில் மழை வெள்ள காலத்தில் பின்பற்றப்பட்டது. தற்போது 120 ஹெக்டேர் பரப்பளவில் மிதக்கும் பண்ணைகள் அமைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.