போக்குவரத்து விதி மீறல்களுக்கு 10 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு சாலைகளில் வழிவிடாதோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் அனுமதிக்கப்பட்டதை விட வேகமாக ஓட்டினால் இருசக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாயும் நடுத்தர ரக வாகனத்திற்கு 2 ஆயிரம் ரூபாயும் கனரக வாகனத்திற்கு 4 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும் கார்களில் சீட் பெல்ட் அணியாமலும் பயணிப்போருக்கு விதிக்கப்படும் அபராதம் 100 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஓட்டுநர் உரிமம் இல்லாம் வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம் 500 ரூபாய்க்கு பதில் இனி 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.
அதிக சுமையேற்றி வரும் வாகனங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்பதும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும்
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், அவசர சேவை வாகனங்களுக்கு சாலைகளில் வழிவிடாதோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட போக்குவரத்து வாகனங்களில் கூடுதல் ஆட்கள் ஏற்றப்பட்டால், அதில் கூடுதலாக ஏற்றப்படும் நபர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.