உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும் டெஸ்லா நிறுவனத்தின் வருவாய் 3-வது காலாண்டில் அதிகரித்திருப்பதாகவும், க்யூ 4 மாடல் கார் சிறந்த மின்சார காராக இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
க்யூ 4 வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டெஸ்லா வேகமாக வளர்வதாக தெரிவித்த மஸ்க், ஆப்பில் மற்றும் சவுதி அராம்கோ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களைவிட டெஸ்லாவின் மதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.