​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கால்நடை கழிவுகளிலிருந்து வரும் வாயுக்களுக்கு வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம்..!

Published : Oct 20, 2022 1:01 PM

கால்நடை கழிவுகளிலிருந்து வரும் வாயுக்களுக்கு வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம்..!

Oct 20, 2022 1:01 PM

நியூசிலாந்தில் கால்நடை கழிவுகளிலிருந்து கிடைக்கும் வாயுக்களுக்கு வரி விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பசு மற்றும் செம்மறி ஆடு கழிவுகளிலிருந்து கிடைக்கும் நீண்டகால விவசாய வாயுக்கள் மற்றும் பயோஜெனிக் மீத்தேன் ஆகியவற்றிற்கு வரி விதிக்க இருப்பதாக அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள நகரங்களின் மையப்பகுதியில் டிராக்டர் மற்றும் பிக்கப் வாகனங்களில் ஒன்று கூடிய விவசாயிகள், வரி விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.