​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெற்பயிரை விளைவிக்க விவசாயிகளுக்கு சீன அரசு பரிந்துரை ..!

Published : Oct 20, 2022 6:49 AM

மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெற்பயிரை விளைவிக்க விவசாயிகளுக்கு சீன அரசு பரிந்துரை ..!

Oct 20, 2022 6:49 AM

ஒரு முறை நடவு செய்தால் பல ஆண்டுகளுக்கு அறுவடை செய்யும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதிய வகை நெல் விதையை சீனாவின் ஷென்சென் பிஜிஐ ரிசர்ச் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மரபணு ரீதியாக கண்டறியப்பட்ட இந்த வகை நெற்பயிரை பயன்படுத்த, விவசாயிகளுக்கு சீன அரசு  பரிந்துரைத்துள்ளது.

பாரம்பரிய நெல் வகைகளை காட்டிலும், 2 மடங்கு மகசூலை தரும் இந்த வகை நெல்லானது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவை.

இயந்திரங்கள், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாகவும், குறைந்தளவு விவசாய நிலத்தை மட்டுமே பயன்படுத்தி அதிகளவில் நெல் உற்பத்தி செய்யவும் இந்த புதிய வகை நெற்பயிர் உதவும்.