​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத் தலைவனின் மகன் தஹலாவை தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை!

Published : Oct 20, 2022 6:39 AM

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத் தலைவனின் மகன் தஹலாவை தீவிரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை!

Oct 20, 2022 6:39 AM

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத் தலைவன் ஹபீஸ் சையத்தின் மகன் தஹலா சையத்தை சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் வைத்து தடை விதிக்க அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஐநா.வில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்து முறியடித்தது.

சில மணி நேரத்துக்கு முன்னதாக ஷஹீத் முகமது என்பவனை தீவிரவாதியாக அறிவிக்கவும் சீனா முட்டுக்கட்டைப் போட்டது. இது போல் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 5 முறை சீனா முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளது.