​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங். தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்க்கே வெற்றி..!

Published : Oct 19, 2022 2:03 PM

காங். தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்க்கே வெற்றி..!

Oct 19, 2022 2:03 PM

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் கார்கேக்கு 7,897 வாக்குகள் கிடைத்தன.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்
சசி தரூருக்கு ஆயிரத்து 72 வாக்குகளே கிடைத்தன.

416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதனால் கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, சோனியா குடும்பத்தை சாராத ஒருவர், 22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராகிறார்.

அப்பெருமையை மல்லிகார்ஜூன கார்கே பெறுகிறார்.