தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில், 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் கூடுதலாக கட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய அவர், தமிழகத்தில் பல்வேறு பணிகளால் சேதமடைந்த 4 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூர சாலைகள், 2,200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என்றும், சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட திட்டங்களின்கீழ் 7,388 கோடி ரூபாய் செலவில் 16,390 கிலோ மீட்டர் சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.