​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போக்சோவில் கைது..!

Published : Oct 19, 2022 11:50 AM



எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து போக்சோவில் கைது..!

Oct 19, 2022 11:50 AM

தெலங்கானாவில் எல்கேஜி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் கார் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில், எல்கேஜி சிறுமிக்கு பள்ளி முதல்வரின் கார் டிரைவராக உள்ள ரஜினிகுமார் 2 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், பள்ளிக்கு வந்து ரஜினிகுமாரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.