​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் பகுதி உருவாகக்கூடும் - இந்திய வானிலை மையம்

Published : Oct 19, 2022 11:22 AM

24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் பகுதி உருவாகக்கூடும் - இந்திய வானிலை மையம்

Oct 19, 2022 11:22 AM

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு சின்னம் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குவங்கக் கடல்பகுதியில் உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 22ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயல் சின்னமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.