​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுப் பற்றிய விசாரணை அறிக்கையில் ரஜினிக்கு அறிவுரை..!

Published : Oct 19, 2022 7:34 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுப் பற்றிய விசாரணை அறிக்கையில் ரஜினிக்கு அறிவுரை..!

Oct 19, 2022 7:34 AM

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை நடிகர் ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில், ரஜினிகாந்த் போன்ற திரைப்பிரபலங்கள் பொது வெளியில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்தை தெரிவிக்கும் போது, அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இது போன்ற கருத்துக்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்துவதுடன் மேலும் பல சிக்கல்களை உண்டாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.