​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதைப் பொருள் கும்பலுடன் தீவிரவாதிகளுக்குத் தொடர்பா? 52 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ

Published : Oct 19, 2022 7:17 AM

போதைப் பொருள் கும்பலுடன் தீவிரவாதிகளுக்குத் தொடர்பா? 52 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ

Oct 19, 2022 7:17 AM

போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக தாதாக்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில்  52 இடங்களில் நேற்று தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசமான டெல்லி ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. முக்கியமான தாதாக்கள் மற்றும் அவர்களுக்கு துணை நின்ற ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடைபெற்றன.

சில இடங்களில் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் ரொக்கப்பணம், தங்கக்கட்டிகள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.