​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிரிழந்த பின்னர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை சசிகலா சிக்கிய பின்னணி..! முதல்வருக்கே சிகிச்சை மறுக்கப்பட்ட சோகம்

Published : Oct 18, 2022 6:18 PM



உயிரிழந்த பின்னர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை சசிகலா சிக்கிய பின்னணி..! முதல்வருக்கே சிகிச்சை மறுக்கப்பட்ட சோகம்

Oct 18, 2022 6:18 PM

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்பட பலர் அறிவுறுத்தியும் இறுதி வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு , ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ள ஆறுமுகச்சாமி ஆணையம், ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் சிகிச்சை அளித்து தந்திரம் செய்ததாக குற்றஞ்சாட்டி உள்ளது

அம்மாவுக்கு என்ன ஆச்சி..? அம்மா எப்படி உயிரிழந்தார் ? என்று லட்சோப லட்சம் அதிமுக தொண்டர்களின் மனதில் இருக்கும் கேள்விக்கான விடையாக ஆறுமுகச்சாமி ஆணையத்தில் விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மறைந்த முதல்வரின் உடல் நலக்குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறியதால், இது விசாரிக்கப்பட வேண்டியதாகின்றது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்த அறிக்கையில் சசிகலாவை R1 என்றும் அப்பல்லோவை R2 என்றும் குறிப்பிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ந்தேதி காலை 11:30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அப்பலோ அறிக்கை அளித்துள்ள நிலையில் சாட்சியங்களின் அடிப்படையில் 4ந்தேதி மாலை 3 மணியில் இருந்து 3:30க்குள் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் முதலாம் ஆண்டு திதி கொடுத்த பஞ்சாங்க ஆவணத்தை ஆதாரமாக கொண்டு ஆணையத்தின் பார்வையில் 4 ந்தேதி மாலை 3: 50 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாகவும் அதனை மறைத்து உயிரோடு இருப்பது போல காண்பிப்பதற்காக cpr மற்றும் ஸ்டெர்னோடமி சிகிச்சை மேற்கொள்வது போல தந்திரம் செய்துள்ளனர் எனக்கூறப்பட்டுள்ளது

சசிகலாவின் சதித்திட்டம் தெகல்ஹாவில் வெளியானதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா சசிகலாவை அதிமுகவில் இருந்து வெளியேற்றினார் என்றும் அப்போது சோ உடனிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் 2012 ஆம் ஆண்டு சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொண்ட பின்னர் அவர்கள் இருவருக்குமான நல்லுறவு சுமூகமானதாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாமின் சர்மா , ஜெயலலிதாவிடம் இருதய பாதிப்பு நீங்க ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்ட பின்னர் அதனை செயல்படுத்தாமல்  நுரையீரல்  நிபுணரான அப்பல்லோ டாக்டர் பாபு ஆபிரகாம், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை வரவழைத்தது ஏன் ? என்ற விபரம் இல்லை. ஆஞ்சியோவை தவிர்ப்பதற்காக சில அதிகாரம் பெற்றோருக்கு உதவ அறுவை சிகிச்சையை தள்ளப்போடலாம் என்று டாக்டர் பாபு ஆபிரஹாம் தந்திரம் செய்ததாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்பட பலர் அறிவுறுத்தியும் இறுதி மூச்சு வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு , ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது

சசிகலா குடும்பத்தினர் சென்னையிலேயே ஜெயலாலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்ததால் , ரிச்சர்ட் பீலே சிகிச்சைக்காக வெளி நாடு அழைத்துச்செல்ல தயாராக இருப்பதாக கூறியும் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

இவற்றை கருத்தில் கொண்டு சசிகலாவை குற்றஞ்சாட்டுவதை தவிர வ்ஏறு எந்த முடிவுக்கும் வர இயலாது என்று கூறி உள்ள ஆணையம் வி.கே.சசிகலா, உறவினரான டாக்டர் சிவக்குமார், சுகாதாரத்துறை செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து  விசாரணைக்கு பரிந்துறைக்கின்றது என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் வி.கே. சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜய பாஸ்கர், பாபு ஆபிரகாம், yvc ரெட்டி , முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது