​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்..!

Published : Oct 18, 2022 6:07 PM

கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்..!

Oct 18, 2022 6:07 PM

திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி விசாரித்ததில் லாரி டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

வாகனத்தின் வெளிப்புற நீளத்திற்கும், உள்புறம் இருந்த நீளத்திற்கும் வித்தியாசம் இருந்ததையடுத்து சோதனையிட்டதில் லாரியின் உள்புறம் ரகசிய அறை இருந்தது தெரியவந்தது.

23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கன்டெய்னர் லாரியை குட்கா கடத்துவதற்காகவே டைட்டஸ் என்பவர் வாங்கி ரகசிய அறை அமைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்டெய்னர் லாரியுடன் 300 கிலோ குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.