​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கியில் கத்தியுடன் புகுந்து ஊழியர்களை மிரட்டிய கொள்ளையன்: சண்டையிட்டு கொள்ளையனை விரட்டியடித்த பெண் ஊழியர்

Published : Oct 18, 2022 1:14 PM

வங்கியில் கத்தியுடன் புகுந்து ஊழியர்களை மிரட்டிய கொள்ளையன்: சண்டையிட்டு கொள்ளையனை விரட்டியடித்த பெண் ஊழியர்

Oct 18, 2022 1:14 PM

ராஜஸ்தான் மாநிலத்தில், வங்கிக்குள் கத்தியுடன் வந்த கொள்ளையனுடன் சண்டையிட்டு, கொள்ளை முயற்சியை பெண் ஊழியர் தடுக்கும் சிசிடிவி பதிவு இணையத்தில் பரவி வருகிறது.

ஸ்ரீ கங்காநகரின் மருதாரா கிராம வங்கியில் நுழைந்த கொள்ளையன், அங்கிருந்த வங்கி ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பையில் போடும்படி கூறியுள்ளான்.

அப்போது வந்த வங்கி மேலாளர் பூனம் குப்தா, கொள்ளையனை கண்டு அஞ்சாமல், அவனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கொள்ளையன் கத்தியுடன் மிரட்டிய நிலையில், இடுக்கியுடன் சண்டையிட்ட மேலாளர் பூனம் குப்தா, அவனை விரட்டியடித்தார்.