​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநகர பேருந்தின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள்..!

Published : Oct 18, 2022 12:44 PM

மாநகர பேருந்தின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள்..!

Oct 18, 2022 12:44 PM

சென்னை கோயம்பேடு அருகே, அரசு மாநகர பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை சென்ற அரசு பேருந்தில் பயணித்த மாணவர்கள் சிலர், படிக்கட்டுகளில் தொங்கியபடியும், மேற்கூரையிலும் அமர்ந்தும் பயணம் மேற்கொண்டனர்.

கோயம்பேடு மேம்பாலத்தை பேருந்து கடக்கும் போது, பக்கவாட்டில் தொங்கிய மாணவர்கள், மேற்கூரையில் ஏற முயன்றனர்.