​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்..!

Published : Oct 18, 2022 11:53 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்..!

Oct 18, 2022 11:53 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - விசாரணை அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல்

காவல்துறை செய்யத்தகாதவற்றை செய்து, நிச்சயமாக வரம்பை மீறி உள்ளது - விசாரணை ஆணையம்

17 காவல்துறையினர், அப்போதைய மாவட்ட ஆட்சியர், 3 வருவாய் துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்க ஆணையம் பரிந்துரை

போராட்டக்காரர்களை காட்டில் வேட்டையாடுவது போல் காவலர் சுடலைக்கண்ணு துப்பாக்கியால் சுட்டுள்ளார் - ஆணையம்

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதால் 17 ரவுண்டுகள் சுட்டேன் என்று சுடலைக்கண்ணு தெரிவித்தார் - ஆணையம்

ஆனால், 9 ரவுண்டுகள் தான் சுடச் சொன்னதாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார் - ஆணையம்

காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அற்பமான, அசட்டுத் துணிவான துப்பாக்கிச்சூட்டில் காவலர் சுடலைக்கண்ணு ஈடுபட்டுள்ளார் - ஆணையம்

காவலர் சுடலைக்கண்ணு பயன்படுத்திய துப்பாக்கியில் மேலும் தோட்டாக்கள் இருந்திருந்தால் பல விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிட்டிருக்கும் - ஆணையம்