​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வா.. தங்கம்.. நீ அவனோட ஃபேனா ? செருப்பால் விழுந்த அடி..! பைக் சாகச பாய்க்கு பாயசம்

Published : Oct 17, 2022 7:28 PM



வா.. தங்கம்.. நீ அவனோட ஃபேனா ? செருப்பால் விழுந்த அடி..! பைக் சாகச பாய்க்கு பாயசம்

Oct 17, 2022 7:28 PM

சேலத்தில் பெண்ணை இடிப்பது போல அதிவேகத்தில் பைக் ஓட்டிச்சென்ற சிறுவனை அந்தப்பெண் சிக்னலில் வைத்து மடக்கிப்பிடித்தார். தன்னை தாக்கிய அந்த பைக் சாகச சிறுவனை செருப்பால் வெளுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த நக்மா என்ற பெண் இருசக்கர வாகனத்தில் பெரியார் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம் சிறுவன் ஒருவன் வாகனத்தை  தாறுமாறான வேகத்தில் தன்னை உரசியபடி கட் அடித்துச் சென்றுள்ளான். 

மாவட்ட ஆட்சியர் அலுவலக சிக்னலில் வைத்து சிறுவனை மடக்கிய அந்தப்பெண் வாகனத்தை ஒழுங்காக இயக்க முடியாதா.? என்று சிறுவனிடம் கேட்டதும் ஆபாசமாக பேசி அந்தப் பெண்ணை தாக்கி உள்ளான்.

இதையடுத்து ஆவேசமாக அந்தப்பெண் காலில் கிடந்த செருப்பை கழற்றி அந்த பைக் சாகச பாயை சாத்து சாத்து என்று சாத்தினார்.

அருகில் நின்ற போலீசார் மற்றும் சக வாகன ஓட்டிகள் விரைந்து வந்து இருவரையும் பிரித்து சமாதானப்படுத்தினர்.

பின்னர் போலீசாரிடம் பைக் சாகச பாய் செய்த சேட்டைகளை அந்தப்பெண் எடுத்து கூறினார்.

இடது கையில் கட்டுடன் காணப்பட்ட அந்த சிறுவனின் வாகனத்தில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

போலீசாக இருந்தால் கூட பைக்கில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதியை மீறியதால் அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேகமாக பைக் ஓட்டி வழுக்கி விழுந்து கையில் தசை விலகியதால் கட்டுபோட்டிருப்பதாக கூறியுள்ளான்.

அவனது தந்தை காவலர் என்பது தெரியவந்ததால் அவனை காவல் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார் தந்தையை வரவழைத்து அந்த பைக் சாகச தங்கத்தை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வீம்புக்கு வீலிங் செய்வது... 150 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ஆளில்லா சாலையில் ஆக்ட் கொடுக்கும் பைக் சாகச தங்கங்களுக்கே அவ்வப்போது போலீசார் வழக்கு மூலம் பாடம் புகட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊருக்குள் ஊளையிட்டப்படி வாகனம் ஓட்டினால் உதை கிடைக்கும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த சம்பவம்.