​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"டெஸ்லா கார்களுக்கு ஓலா எலக்ட்ரிக் கார்கள் சவாலாக இருக்கும்" - ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால்..!

Published : Oct 17, 2022 5:58 PM

"டெஸ்லா கார்களுக்கு ஓலா எலக்ட்ரிக் கார்கள் சவாலாக இருக்கும்" - ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால்..!

Oct 17, 2022 5:58 PM

எலன் மஸ்கின் டெஸ்லா கார்களுக்கு, ஓலா நிறுவன எலக்ட்ரிக் கார்கள் சவாலாக இருக்கும் என ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அடுத்து, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிலில் ஓலா நிறுவனம் களம் இறங்கியுள்ளது. 

2024 ஆண்டு முதல்,  எலக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

2027ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள டெஸ்லா நிறுவன கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்ட மாட்டார்கள் என்றும், அதை விட குறைந்த விலையில் கார்களை அறிமுகம் செய்ய தங்களுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பவிஷ் அகர்வால தெரிவித்துள்ளார்.