​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டிமுடிக்கப்பட்டு மூன்று நாட்களே ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்..!

Published : Oct 17, 2022 1:05 PM



அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டிமுடிக்கப்பட்டு மூன்று நாட்களே ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்..!

Oct 17, 2022 1:05 PM

கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்ட மூன்றே நாட்களில் இடிந்து விழுந்துள்ளது.

குருந்தங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே சுவர் விழுந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

200 மீட்டர் நீளம் அளவிற்கு இடிந்து விழுந்த கட்டுமானங்கள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்ட நிலையில் மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.