​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் சிலிண்டர் வெடித்து தீ விபத்து..!

Published : Oct 17, 2022 12:17 PM



குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் சிலிண்டர் வெடித்து தீ விபத்து..!

Oct 17, 2022 12:17 PM

வேடசந்தூர் அருகே தோப்புப்பட்டி குச்சி சாமியார் கோவில் அன்னதான கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி பலத்த காயம் அடைந்தார்.

குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த மூதாட்டி மருதாம்பாளும் அவரது மகள் தனலட்சுமியும் தீயில் இருந்து தப்பித்து தூரமாக வந்துவிட்ட நிலையில் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.

சிலிண்டர் வெடித்து தூக்கி எறியப்பட்டதில் ஹாலோபிளாக் கட்டடம் பெயர்ந்து மூதாட்டியின் மீது விழுந்துள்ளது. மேலும், அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனமும் எரிந்து சாம்பலாகியது.