​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

Published : Oct 17, 2022 6:28 AM

22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல்

Oct 17, 2022 6:28 AM

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள தேர்தலில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் உள்ளிட்ட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று பதிவாகும் வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.