​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்களை காதலிப்பதுபோல ஏமாற்றி, ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு : காசியின் கூட்டாளி கவுதமை கைது செய்தது சிபிசிஐடி..!

Published : Oct 16, 2022 7:12 PM



பெண்களை காதலிப்பதுபோல ஏமாற்றி, ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு : காசியின் கூட்டாளி கவுதமை கைது செய்தது சிபிசிஐடி..!

Oct 16, 2022 7:12 PM

சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களை காதலிப்பது போல் நடித்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட காசியின் கூட்டாளி சிபிசிஐடி போலீசிடம் பிடிபட்டார்.

காசி மற்றும் ஜினோ கைதான நிலையில், மற்றொரு கூட்டாளியான கவுதம், குவைத் சென்று விட்டார். இதனால் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதோடு, விசாரணை சிபிசிஐடி போலீசுக்கும் மாற்றம் செய்யப்பட்டது.

குவைத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த கவுதமை விமான நிலையத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து கவுதமிடம் விசாரித்து வருகின்றனர்.