​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சித்த மருத்துவர் மீது திமுக நிர்வாகி தாக்குதல்.. 'என் பேச்சை கேக்கலேன்னா இது தான் கதி' என மிரட்டல்

Published : Oct 16, 2022 11:24 AM



சித்த மருத்துவர் மீது திமுக நிர்வாகி தாக்குதல்.. 'என் பேச்சை கேக்கலேன்னா இது தான் கதி' என மிரட்டல்

Oct 16, 2022 11:24 AM

நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் கட்டப் பஞ்சாயத்து பேச வந்த திமுக நிர்வாகி ஒருவர் அரசு சித்த மருத்துவரின் மெடிக்கல் கடைக்குள் புகுந்து சித்த மருத்துவர் மற்றும் அவரின் தாயை அடியாள்களுடன் வந்து தாக்கும் சிசிடிவி  காட்சிகள் வெளியாகி உள்ளன. 

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம் என்பவர் அமிர்தாலயா என்ற மெடிக்கல் ஷாப்பினை நடத்தி வருகிறார்.

மேலும் இவர்  மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது மெடிக்கல் ஷாப்பில் நோயாளிகளை பார்த்து சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த நிலையில் இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நீண்ட நாளாக பழக்கடை நடத்தி வரும் சண்முகம் மற்றும் அவரது மகன் மணிமாறன் மற்றும் திருவருள் கமல ஆறுமுகம் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக திருவருள் கமல ஆறுமுகம் நாகை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இருதரப்பையும் பேச்சு வார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்த நிலையில் சண்முகம் தரப்பினர்  திமுக வார்டு செயலாளர் பாபுவை துணைக்கு அழைத்து வந்துள்ளனர். 

அவர் சண்முகத்திற்கு ஆதரவாக பேசிய நிலையில் அதை சித்த மருத்துவர் ஏற்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாபு தன்னுடைய அடியாட்களுடன் சித்த மருத்துவ கிளினிக்கிற்கு சென்று கண்ணாடியை உடைத்து அதை தடுக்க வந்த மருத்துவரின் தாய் சாந்தி மற்றும் மருத்துவரையும் தாக்கியுள்ளார்.