​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காளிக்கு மிளகாய் பொடி அபிஷேகம்.. அதிகாரிகளுக்கு தண்டனை தர வேண்டி செய்த பெண் சாமியார்

Published : Oct 16, 2022 6:28 AM



காளிக்கு மிளகாய் பொடி அபிஷேகம்.. அதிகாரிகளுக்கு தண்டனை தர வேண்டி செய்த பெண் சாமியார்

Oct 16, 2022 6:28 AM

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலை இடிக்க சென்ற அதிகாரிகளுக்கு தண்டனை தர வேண்டி பெண் சாமியார் ஒருவர் காளிக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தார். 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வருடங்களாக திருநங்கைகள் சிலர் காளி கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த கோயில் கட்டிய இடம் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைந்திருப்பதாக கூறி அரசு அதிகாரிகள் அதனை அகற்றுவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கிருந்த திருநங்கைகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் ஒரு பகுதியை இடித்த போது திடீரென அங்கிருந்த முருகம்மாள் என்கிற பெண் சாமியார், காளியம்மன் , நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சிலைகள் மீது திடீரென மிளகாய் பொடி கலந்த நீரில் அபிஷேகம் செய்து அதிகாரிகளுக்கு தண்டனை தருமாறு வேண்டினார்.

பின்னர் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு கோவிலை இடிக்காமல் மேற்கூரை மட்டும் கழற்றப்பட்டது.