​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிசிடிவியால் பிழைப்பு கெட்டுப் போச்சி.. வீடு புகுந்து தாக்கிய களவாணி கும்பல்..!

Published : Oct 15, 2022 10:09 PM



சிசிடிவியால் பிழைப்பு கெட்டுப் போச்சி.. வீடு புகுந்து தாக்கிய களவாணி கும்பல்..!

Oct 15, 2022 10:09 PM

வீட்டில் சிசிடிவி பொறுத்தப்பட்டிருப்பதால் திருட்டு தொழிலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி களவானிக் கும்பல் ஒன்று ஒப்பந்ததாரர் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னப்ப நாயக்கனூர் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரன். இவர் கோயம்புத்தூரில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி வீட்டை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தி உள்ளார் .

சிறுசிறு திருட்டு மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபடும் ஆசாமிகளுக்கு இந்த சிசிடிவி இடையூறாக உள்ளதாக கூறப்படுகின்றது. ஏதாவது பொருட்களை திருடிக்கொண்டு வீட்டுக்குச் சென்றால் இங்குள்ள கேமராக்களை வைத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட களவாணிகளை அடையாளம் கண்டு கைது செய்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சிசிடிவியால் தங்கள் திருட்டு பிழைப்பு கெட்டுபோனதாக கூறி ஆத்திரம் அடைந்த களவாணி கும்பல் ஒன்று கொலை வெறியுடன் ஈஸ்வரன் வீட்டிற்குள் புகுந்தது. வீட்டில் இருந்தவர்களை, கம்பாலும், கையில் கிடைத்த பொருட்களை எடுத்தும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது

தாக்குதலை தடுக்க முயன்ற பெண்களின் ஆடைகளை பிடித்து இழுத்து கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதில் ஈஸ்வரனின் குடும்பத்தினருக்கு பலத்த காயம் ஏற்பட்டது

பக்கத்து தெருவில் வசிக்கும் சந்தோஷ், அவரது நண்பர்கள் உறவினர்கள் உட்பட 9 பேர் ஈஸ்வரன் வீட்டில் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியதாக சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களில் மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெண் உள்ளிட்ட ஆறு பேரை ஊத்தங்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.