​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 91 வது பிறந்தநாள்

Published : Oct 15, 2022 11:51 AM

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 91 வது பிறந்தநாள்

Oct 15, 2022 11:51 AM

ஏவுகணை நாயகன் என்று போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ஏவுகணை விஞ்ஞானியான பாரத ரத்னா டாக்டர் அப்துல்கலாம் நாட்டின் 11 வது குடியரசுத்தலைவராக பதவி வகித்து, தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

இன்று அவரது 91 வது பிறந்தநாள் என்பதால், பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்துல் கலாம் குடும்பத்தினர் சிறப்பு பிராத்தனை நடத்தினார்கள். தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.