​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா அதிகாரிகள் முடிவு

Published : Oct 15, 2022 6:25 AM

லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா அதிகாரிகள் முடிவு

Oct 15, 2022 6:25 AM

லடாக் எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் தீவிர முயற்சியால், கிழக்கு லடாக்கில் இருதரப்பினரும் படைகளை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடங்களில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, கோக்ரா- ஹாட்ஸ்பிரிங்ஸ் அருகே படைகள் வாபஸ் நடவடிக்கைகளுக்கு இருதரப்பினரும் வரவேற்புத் தெரிவித்தனர்.

15வது ரோந்துப் பகுதியில் சர்ச்சைக்குரிய டெம்சாக், டெப்சாங் ஆகிய இரண்டு இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 17வது சுற்றுப் பேச்சுவார்த்தையை விரைவில் மேற்கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எல்லைப் பகுதியில் சுமுக நிலையை ஏற்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இந்திய- சீன அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.