​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டால் உலக பேரழிவு ஏற்படும்” - ரஷ்ய அதிபர் புதின்..

Published : Oct 14, 2022 9:45 PM

“ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டால் உலக பேரழிவு ஏற்படும்” - ரஷ்ய அதிபர் புதின்..

Oct 14, 2022 9:45 PM

ரஷ்யாவுடன் நேரடி மோதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டால், உலகளாவிய பேரழிவு ஏற்படும் என கூறிய ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.

கஜகஸ்தான் தலைநகர் Astana-வில் பேசிய அவர், இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், உஸ்பெகிஸ்தானில் நடந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா, உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளித்ததை புதின் குறிப்பிட்டார்.