​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் மீது போக்சோ..

Published : Oct 14, 2022 3:24 PM

தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் மீது போக்சோ..

Oct 14, 2022 3:24 PM

தேனி மாவட்டம் கம்பத்தில், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசிரியர் ராஜேஷ் கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் பாலியல் தொல்லை அளிப்பதாக, 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர் ராஜேஷ் கண்ணனை போக்சோ சட்டத்தில் சிறையிலடைத்தனர்.