மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தின் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும்-நாளையும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் உட்பட 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. நாளை மறுநாளும் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.