​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்கனில் கல்லூரி நுழைவுத்தேர்வு எழுத பெண்களுக்கு தாலிபன்கள் அனுமதி..!

Published : Oct 14, 2022 2:10 PM

ஆப்கனில் கல்லூரி நுழைவுத்தேர்வு எழுத பெண்களுக்கு தாலிபன்கள் அனுமதி..!

Oct 14, 2022 2:10 PM

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதன்முறையாக, பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க, பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு, தாலிபன்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், காபூல் பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வு எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று முதன்முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

தலைநகர் காபூலில் கடந்த மாதம் பயிற்சி மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.