​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கைக்குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்த இளம்பெண்.. தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை பலி

Published : Oct 14, 2022 1:11 PM

கைக்குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்த இளம்பெண்.. தாய் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை பலி

Oct 14, 2022 1:11 PM

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 8 மாத கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்த இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

அண்ணாபுரம் வடக்குக்காடு பகுதியை சேர்ந்த செல்வக்குமார்- தேன்மொழி தம்பதிக்கு, திருமணமாகி 7 வருடங்களுக்கு பின், ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தேன்மொழி தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். குழந்தை நீரில் மூழ்கி இறந்துவிட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.