திருத்தணி அருகே, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை மீது தொலைக்காட்சி பெட்டி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தது.
சதாம் உசேன் என்பவரது 2 வயது ஆண் குழந்தை சூபியன், நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது டி.வி ஸ்டாண்டை பிடித்து குழந்தை இழுத்தபோது, எதிர்பாராத விதமாக டி.வி, குழந்தையின் மார்பு மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனே பெற்றோர், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.