​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை..!

Published : Oct 14, 2022 11:04 AM

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்திய எல்லை பாதுகாப்புப்படை..!

Oct 14, 2022 11:04 AM

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை அருகே பறந்த பாகிஸ்தான் ட்ரோனை, இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பகுதியில் இருந்து, இந்திய பகுதிக்குள் ட்ரோன் ஒன்று இன்று அதிகாலை நுழைந்தது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப்படையினர், அந்த ட்ரோனை 17 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.