​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் - 11 இடங்களில் கத்திக்குத்து

Published : Oct 14, 2022 9:03 AM

இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல் - 11 இடங்களில் கத்திக்குத்து

Oct 14, 2022 9:03 AM

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் இனவெறி காரணமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் உடலில் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளதாக, அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் 28 வயதான இந்தியர் சுபம் கார்க், கடந்த 6ம் தேதி தாக்குதலுக்கு ஆளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆக்ராவில் வசிக்கும் அவரது பெற்றோர், இது இனவெறித்தாக்குதல் எனவும், கடந்த ஏழு நாட்களாக விசாவுக்காக போராடி வருவதாகவும் கூறினர்.