இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப்.பின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் 1 ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டாலினா, கடினமான காலங்களிலும் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாகவும், இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டார்.