சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள், பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், நகருக்குள் வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை அச்சமடையச் செய்துள்ளது.