​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் ரூ.1000 அபராதம்- 3 மாதங்கள் லைசென்சு ரத்து

Published : Oct 09, 2022 7:07 AM

இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு இனி ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் ரூ.1000 அபராதம்- 3 மாதங்கள் லைசென்சு ரத்து

Oct 09, 2022 7:07 AM

புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுவை போக்குவரத்து காவல் ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், புதுவையில் சமீப காலமாக சிறுவர்கள் அதிகளவில் அனுமதியின்றி இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது அதிகரித்துள்ளது என்றும் அதனால் விபத்துக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட்  அணிவது கட்டாயம் என்றும் மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.