தேர்தல் ஆணையத்தால் சிவசேனா கட்சியின் பெயரும் வில் அம்பு சின்னமும் முடக்கப்பட்டுள்ளதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினர் திட்டமிட்டுள்ளனர்.
கட்சியின் சின்னத்திற்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தரப்பும் உரிமை கோரிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு தரப்பினரும் இன்று அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். நடைபெற உள்ள அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், திங்கட்கிழமை பகல் ஒருமணிக்குள் புதிய சின்னம், கட்சிப் பெயருடன் அணுகுமாறும் தேர்தல் ஆணையம் இருதரப்புக்கும் உத்தரவிட்டுள்ளது.