​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்!

Published : Oct 07, 2022 3:47 PM



கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்!

Oct 07, 2022 3:47 PM

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்திற்கு காப்பகத்தின் மெத்தனபோக்கே காரணம் என்றும், சம்பந்தப்பட்ட விவேகானந்தா சேவாலய காப்பகம் மூடப்படும் என்றும், மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து காப்பகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், 3 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான காப்பகம் மூடப்படும் என்றும் தெரிவித்தார்.