திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரவு நேரத்தில் அரிவாளுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
பழனி நகராட்சிக்கு உட்பட்ட குறும்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கையில் அரிவாளுடன் சாலையில் நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பழனி நகர போலீசார், இருதரப்பு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அரிவாளுடன் சென்ற தெற்கு அண்ணா நகரை சேர்ந்த ஸ்ரீகுமார், சந்துரு ஆகியோரை கைது செய்தனர்.