​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

Published : Oct 07, 2022 2:11 PM

பேருந்து சக்கரத்தில் தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

Oct 07, 2022 2:11 PM

சென்னை மேடவாக்கத்தில், அரசு பேருந்தின் படிக்கெட்டில் இருந்து தவறி விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த பள்ளி மாணவன், ஒரு மாத சிகிச்சை பின், பலனின்றி உயிரிழந்தார்.

பெரும்பாக்கத்தை சேர்ந்த 14 வயதான பள்ளி மாணவன் ஆர்யா, கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அரசு பேருந்தின் படிக்கெட்டில் தொங்கியபடி பயணம் செய்த போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த ஆர்யா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.