மும்பை உள்ளூர் ரயிலில் இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் பெண் காவலர் ஒருவர் காயமடைந்தார். தானே-பன்வெல் இடையேயான உள்ளூர் ரயிலில் உட்காரும் இடத்திற்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
சக பயணிகள் தடுக்க முயன்று முடியாத காரணத்தால் ரயில்வே காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். பெண் காவலர் வந்ததும் அமைதியாக இருந்த பெண்கள், சிறிது நேரத்தில் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதை தடுக்க முயன்ற பெண் காவலரின் தலையில் தாக்கியதில் அவரும், மற்றொரு பயணியும் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் காவலரைத் தாக்கிய பெண்ணை கைது செய்தனர்.