ரஷ்ய சுற்றுலா பயணிகள், பின்லாந்து நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்கு வீரர்களை ரஷ்யா அணி திரட்டி வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து ஏராளமானோர் பின்லாந்து நாட்டுக்குள் நுழைவது அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, ஷெங்கன் சுற்றுலா விசாவுடன் பின்லாந்து வரும் ரஷ்யர்களுக்கு, இன்று நள்ளிரவு முதல் தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.