சென்னையில், பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட ரவுடி, போலீசாரிடம் சிக்கியதும் மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஐ.சி.எஃப் பகுதியைச் சேர்ந்த இளமாறன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்மையில், கல்லூரி மாணவரை தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செயின் பறித்த வழக்கில் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், கஞ்சா போதையில், பட்டாக்கத்தியுடன் கானா பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டார்.
வீட்டருகே பதுங்கியிருந்த இளமாறனை கைது செய்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். இதையடுத்து மன்னிப்பு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.