சென்னையில், சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும் தனி வட்டியிலிருந்து ஒருமுறை மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது.
நாளை சொத்து வரி செலுத்த கடைசி நாள் என்ற நிலையில், சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு ஒரு முறை மட்டும் 2 சதவீத தனி வட்டி விதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
பூங்காகளை மேம்படுத்துவது, மாதிரி பள்ளிகளை உருவாக்குவது, சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அதிக ஆற்றல் கொண்ட பம்புகளை வாங்குவது உள்பட 97 தீர்மானங்கள், இன்று நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அப்போது பேசிய மேயர் பிரியா, மழை நீர் வடிகால்களை பிரதான வடிகாலுடன் இணைக்கும் பணி அக்டோபர் 10-ந் தேதிக்குள் நிறைவடையும் என்றார்.