அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் கியூபா அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில், மாயமான 20 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அகதிகளை ஏற்றி வந்த படகு, இயான் சூறாவளியில் சிக்கியதில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சென்ற அமெரிக்க கடலோர காவல் படையினர், நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.